இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியதால் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள், 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் 20 இற்கும் மேற்பட்டோரை மீட்டனர். மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!