யுத்தம் காரணமாக காஸாவில் இருந்து இடம் பெயர்ந்த சுமார் 500,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் 72 மணி நேரத்தில் வடக்கு காஸாவுக்குத் திரும்பியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் ஊடக அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
“அரை மில்லியனுக்கும் அதிகமான (500,000) இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கடந்த 72 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய கவர்னரேட்டுகளில் இருந்து காஸா,வடக்கு கவர்னரேட்டுகளுக்கு அல்-ரஷித் , சலா அல்-தின் வீதிகள் வழியாக திரும்பியுள்ளனர்” என்று ஊடக அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் உடனான போர்நிறுத்த உடன்படிக்கையை அடுத்து 15 மாதகால சண்டையை நிறுத்தியதைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த மக்களை காஸா பகுதியின் வடக்கே திரும்புவதற்கு இஸ்ரேல் திங்களன்று அனுமதித்தது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி, மூன்று இஸ்ரேலிய கைதிகளை வியாழன் அன்று விடுதலை செய்வதாகக் கூறியது. அதற்கு ஈடாக 110 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் என்று இஸ்ரேலிய பொது வானொலி தெரிவித்துள்ளது.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”