Monday, March 24, 2025 10:31 am
இங்கிலாந்து கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள மர்மமான உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவற்றில் பல மனிதர்கள் காண முடியா அடர் காடுகளுக்கும், ஆழமான கடல் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றன. சில சமயம் அப்படியான உயிரினங்கள் மனிதர்கள் கண்களுக்கு படும்போது பேசுபொருளாகி விடுகின்றன. இங்கிலாந்தில் அப்படியாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்து கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த ஒருவர் அங்கு மீன் போன்ற உடலும், மனித அமைப்பு போன்ற எலும்புக்கூடு கொண்ட முன்பகுதியையும் கண்டுள்ளார். பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்த அதை அவர் செல்போனில் புகைப்படம் எடுத்து ஷேர் செய்ய அது தற்போது வேகமாக பரவி வருகிறது.