2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இங்கிலாந்திலும், வேல்ஸிலும் அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாத இறுதிக்குள், தீயணைப்பு மீட்புப் பணிகள் இதுபோன்ற 793 சம்பவங்ள் பதிவாகி உள்ளன.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட (104 காட்டுத்தீ) 663% அதிகமாகும், மேலும் 2022 ஆம் ஆண்டை விட (596) 33% அதிகமாகும், இது அப்போது காட்டுத்தீக்கான சாதனை ஆண்டாகும்.
ஓகஸ்ட் 12 வரை, கோடையின் நான்காவது வெப்ப அலையின் மத்தியில் இங்கிலாந்து வேல்ஸி 856 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளன.