97வது திரைப்பட ஒஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான அகாடமி விருதை வென்ற முதல் கறுப்பின மனிதர் என்ற வரலாற்றை பால் டேஸ்வெல் படைத்தார்.
Wicked திரைப்படத்தின் தழுவலில் அவர் செய்த ஆடை வடிவமைப்பு பணிக்காக இந்த மைல்கல்லை அவர் அடைந்தார்.
டேஸ்வெல் இதற்கு முன்னரும் வெஸ்ட் சைட் ஸ்டோரியில் தனது ஆடை வடிவமைப்பிற்காக பரிந்துரைக்கப்பட்டார்
அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் தி விஸ் லைவ்வுக்கான எம்மி விருதும், ஹாமில்டனுக்கான டோனி விருதும் அடங்கும்.
கடுமையான போட்டிக்கு இடையே டேஸ்வெல் வென்றார்
இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுகளில், டேஸ்வெல், அரியான் பிலிப்ஸ், லிண்டா முயர், லிஸி கிறிஸ்டல் மற்றும் ஜான்டி யேட்ஸ் மற்றும் டேவிட் கிராஸ்மேன் ஆகியோருடன் போட்டியிட்டு இந்த விருதினை வென்றுள்ளார்., இந்த படத்திற்காக அவர் வென்ற BAFTA , Critics Choice மற்றும் Costume Designers Guild விருதுகளின் தொடர்ச்சியாகும்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு