மந்திகை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கலானது இன்று காப்பு எடுத்து வருதலுடன் ஆரம்பமாகி 06.06.2025 அன்று மணமாலை படிப்பும் 09.06.2025 அன்று சிலம்பு கூறல் படலமும் விளக்கெரிப்பும் இடம்பெற்று 10.06.2025 அன்று பொங்கல் மற்றும் காவடி நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற கைகூடியுள்ளது.
ஆலயத்தில், வருடந்தோறும் இடம்பெறும் வைகாசிப்பொங்கல் உற்சவத்திற்கு, முதற் திங்கட்கிழமை பரம்பரை பரம்பரையாக புலோலி தெற்கு ஒல்லை வீரபத்திரர் ஆலயத்தில் இருந்து விசேட பூசை வழிபாட்டுடன் மேள தாள வாத்தியத்துடன் கோவலனார் கதை ஏடு எடுத்து செல்லப்பட்டு எட்டு நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட்டு ஒன்பதாம் நாள் வழந்து வைத்தலுடன் பொங்கல் ஆரம்பமாகும்.
புற்றளை,வல்லிபுரம்,குரும்பைகட்டி, காந்தியூர்,மாலைசந்தி,முறாவில், உபயகதிர்காமம்,பருத்தித்துறையிலிருந்து காவடிகள் மற்றும் கரகாட்டம் அடியார்களால் நேர்த்தியாக எடுக்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.