ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே, குறிப்பாக இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஒப்பந்தங்களை விசாரிக்க ஒரு சக்திவாய்ந்த ஆணையத்தை நியமிப்பதன் மூலம் அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தற்போதைய அரசாங்கத்திற்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது கடுமையான விமர்சித்தார். மூத்த விடுதலைப் புலித் தலைவர்கள் தப்பிச் செல்வதற்கு வசதியாக 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்ததாக அவர் குற்றம் சாட்டினார். 2005 ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் வாக்காளர்களின் வாக்குப்பதிவை அடக்குவதற்கு ஈடாக ராஜபக்சே விடுதலைப் புலிகளுக்கு 3 மில்லியன் டொலர் வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே கூட 2009 ஆம் ஆண்டிலேயே இந்த ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரிவித்தார். ஆனால் போர் முயற்சியை வழிநடத்துவதில் நான் கவனம் செலுத்தியதால் அப்போது அரசாங்கத்தை எதிர்கொள்ளாமல் இருந்தேன்” என்று பொன்சேகா கூறினார்.