Thursday, August 21, 2025 2:28 am
அரைகுறை ஆடை அணிந்த அஞ்சல் ஊழியர் ஒருவர், நடந்து வரும் அஞ்சல் வேலைநிறுத்தம் தொடர்பாக தவறான தகவல்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதற்காக தபால் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளனர் தபால் ஊழியர்கள்.
தங்களுக்கு போதுமான சம்பளம் , கொடுப்பனவு என்பனவற்றை களை வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
“எங்கள் சீருடை கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். மிதிவண்டிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் நாங்கள் கோரியுள்ளோம். ஆனால் அவர்கள் கைரேகைகள் , கூடுதல் நேரத்தைப் பற்றி பேசுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
சீருடைகள் தைக்க ரூ.600 வழங்கப்படுவதாகவும், மிதிவண்டிகளுக்கு ரூ.250 கொடுப்பனவாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்த தபால் ஊழியர், இவை போதுமானதாக கருதப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.
அஞ்சல் தொழிற்சங்கங்கள் நடத்தும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து அதிகாரிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
ஞாயிற்றுக்கிழமை (17) தொடங்கிய இந்த வேலைநிறுத்தம், 19 முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்த போதிலும், வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

