வேலூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கூட்டத்திற்குள் புகுந்து ஒரு அம்புலன்ஸ் அலார சத்தத்துடன் சென்றது.
இதனால் அப்செட் ஆன எடப்பாடி பழனிசாமி, திமுக தனது பிரச்சார கூட்டத்தில் இடையூறு செய்வதற்காக இதுபோல அம்புலன்ஸ்களை அனுப்புவதாகவும், அடுத்த முறை இந்த வழியாக அம்புலன்ஸ் வந்தால், அதன் டிரைவரே அந்த அம்புலன்ஸில் நோயாளியாக செல்ல வேண்டி வரும் என எச்சரித்து பேசியது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.