அமெரிக்கா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் வர்த்தக வாய்ப்புகளுக்கு ஏற்ப விநியோக விருப்பங்களை விரிவுபடுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது மதிப்பிட்டு வருகிறது.
அமெரிக்காவில் இருந்து இலங்கை எரிபொருளைப் பெற்றாலும், தளவாட , வணிக நிலைமைகள் சாத்தியமானதாக இருந்தால், அமெரிக்க இறக்குமதியைப் பரிசீலிக்க நிறுவனம் ஆர்வம் காட்டும் என CPC நிர்வாக இயக்குனர் டாக்டர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்தார்.
“இது குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். விலைகள் போட்டித்தன்மை வாய்ந்தவையாகவும், விநியோகச் சங்கிலி நம்பகமானதாகவும் இருந்தால், நாங்கள் திட்டங்களை ஏற்கத் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.