மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான சாலையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில், நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியுடன் வேன் மோதியதில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்பட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.