Tuesday, January 28, 2025 8:49 am
வடமாகாணத்தின் மன்னார்,பூனேரி ஆகிய இடங்களில் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையத் திட்டத்திற்கு இந்தியாவின் அதானி குழுமம் வழங்கிய விலைகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அதானி திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, திட்டம் இடைநிறுத்தப்படவில்லை, ஆனால் இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் விலையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதானி குழுமத்தின் உத்தேச விலைகளை இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றியமைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் இது தொடர்பான மீளாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.