Author: BN

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் தலைவர்…

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மேல்,…

இலவச சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது என்று அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை, மருந்துப்பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணப் பற்றாக்குறை போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண…

காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பில், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. குப்பைகளை திறந்த வெளியில் எரிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும்போது, 2017ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலைக்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் அறிவித்துள்ளது. பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.…

டெல்லியில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்தில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ரக சிற்றூந்து நேற்று மாலை வெடித்து சிதறியுள்ளது. இச் சம்பவத்தில் இதுவரையில் குறைந்தது 9 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும்…

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்தார். அத்துடன், அதில் நால்வர் முற்றாக…

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை வேகப்படுத்துவதற்கு, சிஐடியின் முதற்கட்ட அறிக்கைக்காக காத்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடியில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள மகேந்திரனை செப்டம்பர் 26…

தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகள் மற்றும் இலங்கை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட யுத்தத்தின் போதான, பின்னரான பெரும் குற்றங்கள் தொடர்பிலான வழக்குகளை இலத்திரணியல் படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுக நிகழ்வு இன்று மாலை 04.00 மணிக்கு…

சமூக பாதுகாப்பு வரியால் வாகனங்களின் விலையில் இரண்டரை சதவீதத்தினால் அதிகரிப்பு ஏற்படும் என வாகன இறக்குமதியாளர்கள்  தெரிவித்துள்ளனர். உதாரணமாக சுமார் பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனம் சுமார் ரூ. 250,000 அதிகரிக்கும் என்றும் இறக்குமதியாளர்கள்…