Wednesday, October 29, 2025 10:43 pm
கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியில் இருந்து விசா, பாஸ்போட் உளளிட்ட தூதரக சேவைகளுக்காக பாணியாற்றிய தனியார் நிறுவனம், தனது சேவைகளை முடிவுறுத்தியுள்ளதாக இந்திய தூதரகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
ஐவிஎஸ் லங்கா (IVS Lanka) எனப்படும் தனியார் நிறுவனம் ஒன்று ஒக்ரோபர் மாதம் 31 ஆம் திகதி வரை மாத்திரம் சேவையில் ஈடுபடும் எனவும், நவம்பா் மூன்றாம் திகதியில் இருந்து, விசா வழங்குவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொள்ளும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதாவது, விசா, பாஸ்போர்ட் மற்றும் தூதரக சேவைகளும் நவம்பர் மூன்றாம் திகதி முதல் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், கண்டியில் உள்ள உதவி உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றின் ஊடாக நேரடியாகக் கையாளப்படும் என்று கொழும்பில் உள்ள இந்திய ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இது பற்றி அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. பின்வரும் இணையத்தள முகவரி மூலம் தொடர்புகொள்ள முடியும்.

