பாணந்துறை, வேகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்படும் நிலையமொன்றின் மீது இத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்தவர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த வருடத்தில் மாத்திரம் 50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.