Monday, June 1, 2026 11:39 am
கிரிகெட் ரசிகர்கள் மட்டுமன்றி பெரும்பாலானோரின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிகெட் தொடர் நேற்று நடைபெற்றது. 19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் செம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த மார்ச் 28-ஆம் திகதி 10 அணிகளுடன் பிரம்மாண்டமாகத் ஆரம்பமாகிய 2026 ஐபிஎல் கிரிகெட் தொடர் விறுவிறுப்பான லீக் மற்றும் ‘பிளே-ஓப்’ சுற்றுப் போட்டிகளின் நிறைவில் இறுதிப்போட்டியை எட்டியது. இறுதிப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின.
2022ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிண்ணத்தைக் கைப்பற்றிய குஜராத் அணியும், கடந்த 2025ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணியும் தங்களின் 2 ஆவது கிண்ணத்தை குறிவைத்து நேற்று களம் இறங்கின.
இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடும் என்பதால் நேற்றைய இறுதிப் போட்டி அஹமதாபாத் அரங்கில் திரண்டிருக்கும் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இரண்டு அணிகளினது இரசிகர்களையும் பரபரப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஒவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து155 ஓட்டங்களை பெற்றது. 156 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் அணி 17 ஆவது ஓவர் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 161 ஒட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. இந்த வெற்றியின் மூலம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
ராசிக் சலாம், புவ்ணேஷ்வர் குமார், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் விராட் கோலியின் அபார துடுப்பாட்டம் என்பன றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சம்பியன் பட்டத்தை தக்க வைக்க உதவின.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு முதலாவது ஓவரை மிகவும் நிதானத்துடன் ஆரம்பித்து 5 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்த இரண்டு ஓவர்களில் வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி ஆகிய இருவரும் 50 ஓட்டங்களைக் குவித்தனர். இந்த ஜோடி 27 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர். ஆனாலும் கூட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் முதல் இரண்டு விக்கெட்கள் ஒரு ஓட்ட வித்தியாசத்திலும் அடுத்த இரண்டு விக்கெட்கள் 2 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வீழ்ந்தன.
வெங்கடேஷ் ஐயர் 32 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து தேவ்டத் படிக்கல் 1 ஓட்டத்துடனும், அணித்தலைவர் ரஜாத் பட்டிதார் 15 ஓட்டங்களுடனும், க்ருணல் பாண்டியா 1 ஓட்டத்துடனும் என ஆட்டம் இழந்து நேற்றைய போட்டியில் பிரகாசிக்கத் தவறினர். இவர்களின் ஆட்டமிழப்பால் 91 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது ஆர்சிபி. எனினும் விராட் கோலி, டிம் டேவிட் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர் செய்து வெற்றியை அண்மிக்க உதவினர்.
விராட் கோலி நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 75 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். போட்டியில் வெற்றிக்காக கடைசி ஓட்டத்தை பெறும் தமது கனவு நிறைவேறியுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஜிட்டேஷ் ஷர்மா ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ராஷித் கான் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய முன்னாள் சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் கடும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மிகவும் துல்லியமான பந்துவீச்சு சிறப்பான களத்தடுப்பு என்பன குஜராத் டைட்டன்ஸ் அணியைக் கட்டுப்படுத்தின.
தமிழக வீரர் வொஷிங்டன் சுந்தர் மாத்திரம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி குஜராத் டைட்டன்ஸ் அணியை ஓரளவு உயர்த்தினார். சாய் சுதர்சன் 12 ஓட்டங்கள், அணித் தலைவர் ஷுப்மான் கில் 10 ஓட்டங்கள் பெற்றனர். நிஷாந்த் சிந்து 20 ஓட்டங்கள், ஜொஸ் பட்லர் 19 ஓட்டங்கள், அர்ஷாத் கான் 15 ஓட்டங்கள், ராகுல் தேவாட்டியா 7 ஓட்டங்கள், ஜேசன் ஹோல்டர் 7, ஓட்டங்கள் ராஷித் கான் 7 ஓட்டங்கள் என சிறிய அளவில் ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தனர்.
வொஷிங்டன் சுந்தர் 5 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். கெகிசோ ரபடா ஆட்டம் இழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ராசிக் சலாம் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், புவ்ணேஷ்வர் குமார் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஜொஷ் ஹேஸ்ல்வூட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி அடித்த வெற்றி சிக்ஸரின் உதவியுடன் நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்றிரவு குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 2026 இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை தனதாக்கியது.
போட்டியில் 156 ஓட்டங்களை சேஸிங் செய்த ரஜத் பட்டிதர் தலைமையிலான ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களை எடுத்து வாகை சூடியது.
இந்த வெற்றியுடன் 2025 ஆம் ஆண்டில் தனது முதல் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐ.பி.எல். பட்டங்களை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 மற்றும் 2011ம், மும்பை இந்தியன்ஸ் 2019 மற்றும் 2020ம் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தன.
போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவானார். அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களுக்கான ஒரேஞ்ச் தொப்பியை பொஸ் பேபி என அழைக்கப்படும் ராஜஸ்தான் றோயல்ஸின் 15 வயதேயான வைபவ் சூரியவன்ஷி எடுத்துக் கொண்டார்.

தொடரின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார் வைபவ் சூர்யான்ஷி தெரிவானார். 15 வயதான வைபவ் சூர்யான்ஷி 16 இன்னிங்ஸ்களில் 237 ஸ்டிரைக் ரேட்டில் 776 ஓட்டங்களை எடுத்து நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் ஆனார். அதேசமயம் குஜராத்தைச் சேர்ந்த ககிசோ ரபாடா 17 போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார்.

